இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
|டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.
பார்படாஸ்,
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்பிரிக்கா: டி காக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மில்லர், மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், ரபடா, நோர்ஜே, ஷாம்சி