
image courtesy: AFP
19 வயது இளம் வீரர் கூட விராட் கோலியிடம் அந்த விஷயத்தில் தோற்றுவிடுவார் - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

விராட் கோலி இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.
அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் 19 வயது இளம் வீரரை விட விராட் கோலி அற்புதமான பிட்னசை கடைப்பிடிப்பதாக ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- இந்திய அணியிலேயே அவர்தான் பிட்டான வீரர். 19 வயது இளம் வீரரை அவருடன் பிட்னெசில் போட்டியிட வையுங்கள் அதில் விராட் கோலிதான் வெல்வார். அவரது பிட்னஸ் காரணமாக இன்னும் 5 வருடங்கள் அவர் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம்" என்று கூறினார்.