< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த இங்கிலாந்து
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த இங்கிலாந்து

தினத்தந்தி
|
2 Dec 2024 9:10 AM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் ஸ்டேடியத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 348 ரன்களும், இங்கிலாந்து 499 ரன்களும் எடுத்தன.

இதனையடுத்து 151 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 74.1 ஓவர்களில் 254 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து பிரைடன் கார்ஸ் 6 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 104 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. வெறும் 12.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 100+ ரன்கள் இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டிப்பிடித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்னர் வங்காளதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து 18.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.

அந்த பட்டியல்:-

1. இங்கிலாந்து - 12.4 ஓவர்கள்

2. நியூசிலாது - 18.4 ஓவர்கள்

3. வெஸ்ட் இண்டீஸ் - 19 ஓவர்கள்

4. வெஸ்ட் இண்டீஸ் - 19.3 ஓவர்கள்

5. தென் ஆப்பிரிக்கா - 19.5 ஓவர்கள்


மேலும் செய்திகள்