< Back
கிரிக்கெட்
ரிஷப் பண்ட்டை பாராட்டிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்
கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டை பாராட்டிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்

தினத்தந்தி
|
10 Dec 2024 3:37 PM IST

அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பாராட்டியுள்ளார்.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகள் இழந்த போதும் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த போது தான் எதிர்கொண்ட முதல் பந்தை ரிஷப் பண்ட் அதை அணுகிய விதத்தை நீங்கள் பார்த்தீர்களா என்று எனக்கு தெரியாது. பிட்ச்சில் இறங்கி வந்து பந்தை விளாசினார். அதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். அதை நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக களத்தில் செய்து வருகிறோம். நாங்கள் களத்தில் ரன் குவிக்கவே விரும்புகிறோம், என ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களம் கண்ட ரிஷப் பண்ட் , முதல் பந்தை பிட்ச்சில் இறங்கி வந்து பவுண்டரிக்கு விரட்டினார். இருப்பினும் அந்த இன்னிங்ஸில் பண்ட் 31 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் செய்திகள்