< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Oct 2024 5:45 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ம் தேதி தொடங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் 21 வயதான ஜேக்கப் பெத்தெல் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹன் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

மேலும் செய்திகள்