நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து
|இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில ஆட உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன், ஹாமில்டன் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளதை அடுத்து இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கட் களம் இறங்குகின்றனர். தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஆலி போப் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
இதையடுத்து பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர் ஆகியோர் உள்ளனர். இந்த அணியின் விக்கெட் கீப்பராக ஆலி போப் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி விவரம்;
ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஆலி போப் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர்.