கிரிக்கெட்
எமர்ஜிங் ஆசிய கோப்பை; இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்

image courtesy; @ACCMedia1

கிரிக்கெட்

எமர்ஜிங் ஆசிய கோப்பை; இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
27 Oct 2024 7:39 AM IST

எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோத உள்ளன.

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று அல் அமேரத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்