எமர்ஜிங் ஆசிய கோப்பை; ஓமனை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா 'ஏ'
|இந்தியா ஏ தரப்பில் ஆயுஷ் பதோனி 51 ரன்கள் எடுத்தார்.
அல் அமேரத்,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - ஓமன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் அதிகபட்சமாக முகமது நதீம் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஆகிப் கான், ராசிக் சலாம், நிஷாந்த் சிந்து, ரமன்தீப் சிங், சாய் கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஏ அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா ஏ தரப்பில் ஆயுஷ் பதோனி 51 ரன்கள் எடுத்தார்.
இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றன. இதன் முடிவில் குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.