எமர்ஜிங் ஆசிய கோப்பை; இந்தியா 'ஏ' - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் இன்று மோதல்
|வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) கிரிக்கெட் தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது.
புதுடெல்லி,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) கிரிக்கெட் தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது. அந்தத் தொடரில் இந்தியா ஏ அணி குரூப் - பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான் ஏ, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் இடம் பிடித்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ஹாங் காங்கை வீழ்த்தி வங்காளதேசமும், இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இதில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு.ஏ.இ - ஓமன் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி பாகிஸ்தான் 'ஏ' அணியை சந்திக்க உள்ளது.