< Back
கிரிக்கெட்
துலீப் கோப்பை தொடர்: ஜடேஜா உட்பட 3 முக்கிய வீரர்கள் விலகல்... மாற்று வீரர்கள் அறிவிப்பு

image courtesy: AFP

கிரிக்கெட்

துலீப் கோப்பை தொடர்: ஜடேஜா உட்பட 3 முக்கிய வீரர்கள் விலகல்... மாற்று வீரர்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Aug 2024 5:03 PM IST

துலீப் கோப்பை தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணி பட்டியல் அறிவிக்கப்பட்டது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் சிராஜ், ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள் என்றும் கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் இந்நிலையில் அந்தத் தொடரிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்று பிசிசிஐ தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பி அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜா முதல் ரவுண்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

அதே போல நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவருமே துலீப் கோப்பையின் முதல் ரவுண்டிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் பி அணியில் இடம் பிடித்திருந்தால் சிராஜுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்கும் 'சி' அணியில் இடம் பிடித்திருந்த உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக மத்திய பிரதேச மாநிலத்தின் கவுரவ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்தாக பிசிசிஐ கூறியுள்ளது.

மேலும் செய்திகள்