அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு
|அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
அதேபோன்று கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் கடைசியாக நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.
அந்தவகையில் ஐ.பி.எல் தொடரில் 257 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்னும் அவர் ஓய்வை அறிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.