< Back
கிரிக்கெட்
எனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணடித்தது தோனி, கோலி, ரோகித்தான் - சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு

image courtesy: instagram/ imsanjusamson

கிரிக்கெட்

எனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணடித்தது தோனி, கோலி, ரோகித்தான் - சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
14 Nov 2024 4:11 PM IST

தோனி, விராட் மற்றும் ரோகித் ஆகியோர் தனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டதாக சாம்சனின் தந்தை தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆக சஞ்சு சாம்சன் நிலையான இடத்தை பிடித்துள்ளார். அந்த வாய்ப்பில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதனால் அவர் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த அவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி நிலையான வாய்ப்பு கிடைக்காமல் திணறினார். அதே சமயம் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளிலும் சஞ்சு சாம்சன் அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. தற்போது விமர்சனங்கள் அனைத்தையும் அவர் தனது பேட்டின் மூலம் நொறுக்கியுள்ளார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனின் தந்தையான விஸ்வநாத் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் தனது மகனின் 10 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையை முன்னாள் கேப்டன்களான தோனி, விராட் மற்றும் ரோகித் ஆகியோர் வீணடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், " இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள். மேலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்காமல் முன்னாள் பயிற்சியாளர் டிராவிட்டும் எனது மகனின் கெரியரை வீணடித்து விட்டார். ஆனால் அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும், எனது மகன் சிக்கலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்