< Back
கிரிக்கெட்
தோனி கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் - ஆஸி.முன்னாள் வீரர் கடும் தாக்கு

image courtesy:PTI

கிரிக்கெட்

தோனி கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் - ஆஸி.முன்னாள் வீரர் கடும் தாக்கு

தினத்தந்தி
|
7 April 2025 2:42 PM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரில் தோனி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சிட்னி,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி, ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 43 வயதான அவர், பேட்டிங்கில் இறுதி கட்டத்தில் இறங்கி அணிக்கு தோல்வியை கொடுத்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

குறிப்பாக டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளை எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைந்தார். எனவே அவர் ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டிக்கு பிறகு தோனி கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் (தோனி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டிக்கு பிறகு அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு எங்களுடன் வர்ணனையாளர் குழுவினருடன் வந்து இணைய வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்