< Back
கிரிக்கெட்
அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியாமல் போனதற்கு தோனி மற்றும் கோலிதான் காரணம் - இந்திய வீரர் குற்றச்சாட்டு

image courtesy: AFP

கிரிக்கெட்

அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியாமல் போனதற்கு தோனி மற்றும் கோலிதான் காரணம் - இந்திய வீரர் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
17 Aug 2024 2:13 AM IST

தனது கெரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே தோனி மற்றும் விராட் கோலிதான் என்று அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா, தனது கெரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி போன்ற கேப்டன்கள் செய்த செயல்தான் என ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய அணியில் நான் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன்? என்று தோனியிடம் கேட்டபோது அவர், அணியின் காம்பினேஷனில் நான் பொருந்தவில்லை என்று கூறினார். மேலும் நான் விளையாட வாய்ப்பு கேட்டபோது காம்பினேஷனுக்கு செட் ஆகவில்லை என்றால் ஓய்வு வழங்கப்படும் என்றுதான் கூறினார். தோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை. நிர்வாகத்திடம் பேசினால் கூட தோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

அதேபோன்று 2016-ம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது கோலிதான் என்னை ஆதரித்தார். ஆனாலும் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரும் என்னை அணியில் இருந்து நீக்கினார். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அவருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் நான் அதிக எடையை தூக்கி பயிற்சி செய்ய முடியாது என்று கூறினேன். அதன் பின்னர் கோலியும் என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டு எனக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன். ஆனாலும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்