தீபக் சாஹருக்கு ரூ.9.25 கோடி.. மற்ற வீரர்களை எவ்வளவு தொகைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ்..?
|மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஜெட்டா,
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களின் ஏலத்தொகை பின்வருமாறு:-
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
1. பும்ரா - ரூ. 18 கோடி
2. சூர்யகுமார் யாதவ் - ரூ. 16.35 கோடி
3. ஹர்திக் பாண்ட்யா - ரூ. 16. 35 கோடி
4. ரோகித் சர்மா - ரூ. 16. 30 கோடி
5. திலக் வர்மா - 8 கோடி
மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள்:-
1. டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) - ரூ. 12.50 கோடி
2. தீபக் சஹார் - ரூ. 9.25 கோடி
3. வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து) - ரூ. 5.25 கோடி
4. நமன் திர் - ரூ. 5. 25 கோடி
5. அல்லா கசன்பர் (ஆப்கானிஸ்தான்) - ரூ. 4.80 கோடி
6. மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து) - ரூ. 2 கோடி
7. ரியான் ரிக்கல்டன் (தென் ஆப்பிரிக்கா) - ரூ. 1 கோடி
8. லிசாட் வில்லியம்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - ரூ. 75 லட்சம்
9. ரீஸ் டாப்லி (இங்கிலாந்து) - ரூ. 75 லட்சம்
10. ராபின் மின்ஸ் - ரூ. 65 லட்சம்
11. கரண் சர்மா - ரூ. 50 லட்சம்
12. விக்னேஷ் புதுர் - ரூ. 30 லட்சம்
13. அர்ஜுன் டெண்டுல்கர் - ரூ. 30 லட்சம்
14. வெங்கட சத்யநாரயணா - ரூ. 30 லட்சம்
15. பெவன் ஜான் ஜேக்கப்ஸ் (நியூசிலாந்து) - ரூ. 30 லட்சம்
16. ராஜ் அங்கத் பாவா - ரூ. 30 லட்சம்
17. ஸ்ரீஜித் கிருஷ்ணன் - ரூ. 30 லட்சம்
18. அஷ்வனி குமார் - ரூ. 30 லட்சம்