< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக புதிய உலக சாதனை படைத்த கம்மின்ஸ்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக புதிய உலக சாதனை படைத்த கம்மின்ஸ்

தினத்தந்தி
|
30 Dec 2024 3:56 PM IST

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை கம்மின்ஸ் கைப்பற்றினார்.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி முடிவடைந்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு டிராவும் கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்டின் 2 இன்னிங்சிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக கம்மின்ஸ் கைப்பற்றுவது இது 6-வது முறையாகும்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணியின் கேப்டனின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய கேப்டன் என்ற புதிய உலக சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. கம்மின்ஸ் - ரோகித் சர்மா - 6 முறை

2. டெட் டெக்ஸ்டர் - ரிச்சி பெனாட் - 5 முறை

2. சுனில் கவாஸ்கர் - இம்ரான் கான் - 5 முறை

மேலும் செய்திகள்