< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி தேர்வு
|3 Dec 2024 11:46 AM IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி புதிய தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய வாரியம் இறங்கியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டாட் கிரீன்பெர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிக் ஹாக்லியின் பதிவிக்காலம் முடிவடைந்தவுடன் இவர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.