< Back
கிரிக்கெட்

image courtesy:twitter/@IPL
கிரிக்கெட்
2021-ம் ஆண்டுக்குப்பின் சேசிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ்

31 March 2025 10:43 AM IST
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
கவுகாத்தி,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை எட்ட முடியாத சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே அடித்து நடப்பு தொடரில் 2-வது தோல்வியை பதிவு செய்தது.
இதனையும் சேர்த்து 2021-ம் ஆண்டுக்குப்பின் 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆட்டங்களில் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதன்படி 2021-ம் ஆண்டுக்குப்பின் இதுவரை 175+ ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் ஒன்றை கூட வெற்றிகரமாக சேசிங் செய்யவில்லை. தொடர்ந்து சொதப்பி வருகிறது.
மேலும் இந்த தோல்வியால் சென்னை அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது.