< Back
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்தால் இதுதான் நடந்திருக்கும் - உத்தப்பா
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்தால் இதுதான் நடந்திருக்கும் - உத்தப்பா

தினத்தந்தி
|
1 March 2025 7:47 PM IST

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் தனக்குரிய ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடுகிறது.

மும்பை,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரைஇறுதியும் துபாயில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இதன் காரணமாக இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுத்து வருவதாகவும் இதனால் இந்திய அணி எளிதாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறுகையில், "இந்திய அணி துபாயில் மட்டுமே விளையாடுவது சாதகமாக இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்தியா மட்டும் பாகிஸ்தான் போன்ற தட்டையான ஆடுகளங்களில் சென்று விளையாடி இருந்தால் அங்கு பல சாதனைகளை இந்திய அணியால் நிகழ்த்தியிருக்க முடியும். மேலும் இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கும் வாய்ப்பினையும் அதிகமாக பெற்றிருப்பார்கள்.

நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் இந்திய அணி குறித்து புகார் சொல்லலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவர்கள்தான் அந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள். இந்திய அணிக்கு ஒரே இடத்தில் விளையாடுவதால் முழுவதுமாக நன்மை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவது சற்று அதிக பரீட்சயத்தை ஏற்படுத்தும்

மேலும் செய்திகள்