< Back
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. வெளியான தகவல்

image courtesy: AFP

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. வெளியான தகவல்

தினத்தந்தி
|
3 Jan 2025 10:53 AM IST

தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி19 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் தற்போது இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் பி.சி.சி.ஐ.க்கு திருப்திகரமாக இல்லை.

இதனால் தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 உலகக்கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்தும் அவரை நீக்கி விட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்