< Back
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: நியூசிலாந்து முன்னணி வீரர் பங்கேற்பதில் சிக்கல்

image courtesy: ICC

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: நியூசிலாந்து முன்னணி வீரர் பங்கேற்பதில் சிக்கல்

தினத்தந்தி
|
7 March 2025 2:05 PM IST

இவர் லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

துபாய்,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி வரும் 9-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தின்போது பீல்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இறுதிப்போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஒருவேளை இவர் குணமடையாத பட்சத்தில் அது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக அமையும். ஏனெனில் நடப்பு தொடரில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இறுதிப்போட்டியிலும் இந்திய அணியுடன் மோத உள்ளதால் நியூசிலாந்துக்கு இது அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்