< Back
கிரிக்கெட்
எனக்கும் பும்ராவுக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா..? - வியப்புடன் பதிவிட்ட ஷம்சி
கிரிக்கெட்

எனக்கும் பும்ராவுக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா..? - வியப்புடன் பதிவிட்ட ஷம்சி

தினத்தந்தி
|
19 Nov 2024 5:01 PM IST

டி20 கிரிக்கெட்டில் பும்ரா மற்றும் தம்முடைய புள்ளி விவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக ஷம்சி வியப்புடன் பதிவிட்டுள்ளார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தம்முடைய புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்சி வியப்புடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "வேடிக்கையான உண்மை. ஜஸ்பிரித் பும்ராவும் நானும் மிகச்சரியாக ஒரே அளவிலான சர்வதேச டி20 போட்டிகளை விளையாடி உள்ளோம். அந்தப் போட்டிகளில் நாங்கள் இருவரும் சம அளவிலான பந்துகளை வீசியுள்ளோம். மேலும் இருவரும் ஒரே அளவிலான விக்கெட்டுகளை எடுத்துள்ளோம். என்ன ஒரு அற்புதமான ஒற்றுமை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்