< Back
கிரிக்கெட்
பிரிஸ்பேன் டெஸ்ட்: சதம் அடித்தால் 3-வது வீரராக விராட் கோலி படைக்க உள்ள மாபெரும் சாதனை
கிரிக்கெட்

பிரிஸ்பேன் டெஸ்ட்: சதம் அடித்தால் 3-வது வீரராக விராட் கோலி படைக்க உள்ள மாபெரும் சாதனை

தினத்தந்தி
|
13 Dec 2024 8:38 AM IST

ஆஸ்திரேலியா - இந்தியா 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, 2-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதனிடையே 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி ஆகிய 5 மைதானங்களிலும் சதம் அடித்த 3-வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதற்கு முன்னர் வெளிநாட்டு வீரர்களில் இந்தியாவின் கவாஸ்கர், இங்கிலாந்தின் அலஸ்டயர் குக் ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்