பாக்சிங் டே டெஸ்ட்: மாபெரும் சாதனை படைத்த கள நடுவர்
|இந்தியா - ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கள நடுவராக ஆண்டி பைகிராப்ட் பணியாற்றி வருகிறார்.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த போட்டியில் கள நடுவராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி பைகிராப்ட் பணியாற்றி வருகிறார். இது நடுவராக இவரது 100-வது போட்டியாக அமைந்துள்ளது.
இதன் மூலம் ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய 4-வது நபர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ரஞ்சன் மதுகல்லே - 225 போட்டிகள்
2. ஜெப் குரோவ் - 125 போட்டிகள்
3. கிறிஸ் பிராட் - 123 போட்டிகள்
4. ஆண்டி பைகிராப்ட் - 100 போட்டிகள்