பாக்சிங் டே டெஸ்ட்: ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம்..? - வெளியான தகவல்
|இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில், பாக்சிங் டே டெஸ்டில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த போது அவரது காலில் பந்து தாக்கியதால் வலி ஏற்பட்டது.
இதன் காரணமாக வலியில் துடித்த அவருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.