பாக்சிங் டே டெஸ்ட்; ஆடும் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். மேலும், காயம் காரணமாக விலகிய ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 3வது போட்டியில் இடம் பிடித்த வீரர்கள் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம்; உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.