< Back
கிரிக்கெட்
பார்டர்-கவாஸ்கர் டிராபி; புது அவதாரம் எடுக்கும் புஜாரா..? - வெளியான தகவல்

கோப்புப்படம்

கிரிக்கெட்

பார்டர்-கவாஸ்கர் டிராபி; புது அவதாரம் எடுக்கும் புஜாரா..? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
18 Nov 2024 1:42 PM IST

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான செத்தேஷ்வர் புஜாராவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் இன்றளவும் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வரும் புஜாரா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வீரராக இடம் பிடிக்காத புஜாரா, இந்த தொடரில் இந்தி வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடிக்காத போது தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டு வந்திருந்த வேளையில் தற்போது அவரைப் போன்றே புஜாராவும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்