< Back
கிரிக்கெட்
பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியில் ஷமி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் - டிம் பெய்ன்

கோப்புப்படம்

கிரிக்கெட்

பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியில் ஷமி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் - டிம் பெய்ன்

தினத்தந்தி
|
30 Oct 2024 1:00 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இம்முறை கண்டிப்பாக ஆஸ்திரேலியா வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலியா வெல்லும் அணியாக தொடரை துவங்கும். இந்தியா நன்றாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். அவர்களின் பேட்டிங் கொஞ்சம் உடையக்கூடியதாக இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வெளியீடுகள் அடிப்படையில் ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் தரத்தை பெற்றுள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியும்.

அவர்களிடம் ஷமி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதனால் பும்ரா தனது தோளில் அதிக பாரத்தை சுமக்க நேரிடும். அவர் காயத்தை சந்தித்தால் இன்னும் பின்னடைவு ஏற்படலாம். நியூசிலாந்து அணி அந்தளவுக்கு தரமாக செயல்படவில்லை. இருப்பினும் அவர்கள் நம்ப முடியாத செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது இந்தியாவை கொஞ்சம் கவலையடைய வைத்திருக்கும் என்பதை உண்மையாகும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷமி இல்லாமல் அவர்கள் ஆத்திரேலியாவுக்கு வர உள்ளனர். அதே சமயம் இந்தியாவின் தவறுகளை பயன்படுத்தி தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொடரில் இந்தியா நிறைய தவறுகள் செய்தது என்று நினைக்கிறேன். மறுபுறம் நியூஸிலாந்து கேட்ச்களை அற்புதமாக பிடித்து வென்றது. அவர்களுக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்