< Back
கிரிக்கெட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்த மைக்கேல் வாகன்
கிரிக்கெட்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்த மைக்கேல் வாகன்

தினத்தந்தி
|
7 Jan 2025 9:29 AM IST

மைக்கேல் வாகன் தேர்வு செய்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

லண்டன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு தான் தேர்வு செய்த அணியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறிவித்துள்ளார். அவரது அணியில் 6 ஆஸ்திரேலிய வீரர்களும், 5 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மைக்கேல் வாகன் தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-

சாம் கான்ஸ்டாஸ், ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் போலன்ட்

மேலும் செய்திகள்