கிரிக்கெட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் காயம்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒரு மாத காலம் விலகல்
கிரிக்கெட்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் காயம்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒரு மாத காலம் விலகல்

தினத்தந்தி
|
9 Jan 2025 2:57 PM IST

இதனால் இவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முதுகு வலி காரணமாக 5-வது போட்டியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின்போது ஏற்பட்ட முதுகு வலி பிரச்சினையிலிருந்து ஆகாஷ் தீப் முழுமையாக குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இவர் ஒரு மாதம் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெற வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

மேலும் செய்திகள்