< Back
கிரிக்கெட்
பார்டர்-கவாஸ்கர் டிராபி; பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்
கிரிக்கெட்

பார்டர்-கவாஸ்கர் டிராபி; பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்

தினத்தந்தி
|
14 Nov 2024 7:39 AM IST

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தற்போதே வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர் . பெர்த் நகரில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது .

மேலும் செய்திகள்