பார்டர்-கவாஸ்கர் டிராபி; ஆஸ்திரேலியா புறப்பட்டார் கவுதம் கம்பீர்
|இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடரில் ஆடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனிப்பட்ட காரணத்துக்காக கடந்த 26-ந் தேதி டெல்லி திரும்பினார் இதனால் கான்பெராவில் நடந்த ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கவுதம் கம்பீர் நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டார். அவர் அடிலெய்டில் இன்று இந்திய அணியினருடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.