< Back
கிரிக்கெட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை கடைசி டெஸ்ட்: இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

image courtesy: AFP

கிரிக்கெட்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை கடைசி டெஸ்ட்: இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

தினத்தந்தி
|
2 Jan 2025 9:15 AM IST

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் விலகியுள்ளதாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கம்பீர், முதுகு வலி காரணமாக ஆகாஷ் தீப் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்