< Back
கிரிக்கெட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை  :  தொடர் நாயகனாக பும்ரா தேர்வு
கிரிக்கெட்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை : தொடர் நாயகனாக பும்ரா தேர்வு

தினத்தந்தி
|
5 Jan 2025 10:21 AM IST

பும்ரா சிறப்பாக செயல்பட்டு 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்பட்டு 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் .இதனால் பார்டர் கவாஸ்கர் தொடரின் நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சிட்னி டெஸ்ட் போட்டியில், 2 இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்