கிரிக்கெட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: பெர்த் முதல் சிட்னி வரை.. ஆடுகளங்களின் தரத்தை மதிப்பிட்ட ஐ.சி.சி.
கிரிக்கெட்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: பெர்த் முதல் சிட்னி வரை.. ஆடுகளங்களின் தரத்தை மதிப்பிட்ட ஐ.சி.சி.

தினத்தந்தி
|
9 Jan 2025 3:49 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது.

துபாய்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனையடுத்து பிரிஸ்பேனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் மழை காரணமாக சமனில் முடிந்தது. மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெற்ற கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முன்னதாக டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தின் தரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மதிப்பீடு செய்வது வழக்கம். அந்த வகையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடந்த ஆடுகளங்களையும் ஐ.சி.சி. மதிப்பீடு செய்துள்ளது.

அதன்படி இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் நடைபெற்ற பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய மைதானங்களின் ஆடுகளங்களை மிகச்சிறந்தது என்றும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்ற சிட்னி ஆடுகளத்தை திருப்திகரமான ரகம் என்றும் மதிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்