< Back
கிரிக்கெட்
கேப்டனாக களமிறங்கும் புவனேஷ்வர் குமார்.. எந்த தொடரில் தெரியுமா..?

image courtesy: PTI

கிரிக்கெட்

கேப்டனாக களமிறங்கும் புவனேஷ்வர் குமார்.. எந்த தொடரில் தெரியுமா..?

தினத்தந்தி
|
19 Nov 2024 9:05 PM IST

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான உத்தரபிரதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள அணிகள் வரிசையாக தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேசமும் தனது அணியை அறிவித்துள்ளது.

அந்த அணிக்கு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் ரிங்கு சிங், நிதிஷ் ராணா, யாஷ் தயாள் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரபிரதேச அணி விவரம் பின்வருமாறு:-

புவனேஷ்வர் குமார் (கேப்டன்), மாதவ் கவுஷிக், கரண் சர்மா, ரிங்கு சிங், நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, ஸ்வஸ்திக் சிகாரா, பிரியம் கார்க், ஆர்யன் ஜுயல், ஆதித்யா சர்மா, பியூஷ் சாவ்லா, விப்ராஜ் நிகம், கார்த்திகேயா ஜெய்ஸ்வால், ஷிவன் சர்மா, யாஷ் தயாள், மொஷின் கான், ஆகிப் கான், ஷிவம் மாவி மற்றும் வினீத் பன்வார்.

மேலும் செய்திகள்