< Back
கிரிக்கெட்
சிறந்த கேப்டன் தோனியா...ரோகித்தா..? - ஷிவம் துபே அளித்த பதில்

Image : AFP

கிரிக்கெட்

சிறந்த கேப்டன் தோனியா...ரோகித்தா..? - ஷிவம் துபே அளித்த பதில்

தினத்தந்தி
|
6 Oct 2024 12:51 PM IST

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிவம் துபே காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மிகவும் பிரபல தனியார் பேட்டி நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஷிவம் துபே, அக்சர் படேல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஷிவம் துபேவிடம் சிறந்த கேப்டன் தோனியா? ரோகித் சர்மாவா? என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த ஷிவம் துபே கூறியதாவது, நான் சி.எஸ்.கே அணிக்காக விளையாடும் பொழுது தோனி பாய் சிறந்த கேப்டன். நான் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது ரோகித் பாய் சிறந்த கேப்டன் என கூறினார். இதை நிகழ்ச்சியில் உடன் இருந்து கேட்ட ரோகித் சர்மா அருமை என்பது போல சிக்னல் செய்தார்.


மேலும் செய்திகள்