< Back
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சு - அஸ்வின் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்

Image Courtesy; AFP

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சு - அஸ்வின் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்

தினத்தந்தி
|
12 Jun 2024 10:29 PM IST

இன்று நடைபெற்று வரும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவுடன் ஆடி வருகிறது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவுடன் ஆடி வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஷயான் ஜஹாங்கீர், ஸ்டீவன் டெய்லர் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜஹாங்கீர் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 3வது வீரராக களம் இறங்கிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்னிலும், ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்டீவன் டெய்லர் உடன் நிதிஷ் குமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக அடி ரன்கள் குவித்தனர். இதில் நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும், நிதிஷ் குமார் 27 ரன்னிலும் அவுட் ஆகினர்,

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் , ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 111 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது அமெரிக்காவுக்கு எதிரான அர்ஷ்தீப் சிங்கின் இந்த பந்துவீச்சு டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாக பதிவானது.

டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சு;

அர்ஷ்தீப் சிங் - 4/9 - அமெரிக்கா, 2024

ரவிச்சந்திரன் அஸ்வின் - 4/11 - ஆஸ்திரேலியா, 2014

ஹர்பஜன் சிங் - 4/12 - இங்கிலாந்து, 2012

ஆர்.பி.சிங் - 4/13 - தென் ஆப்பிரிக்கா, 2007

ஜாகீர் கான் - 4/19 - அயர்லாந்து - 2009

மேலும் செய்திகள்