< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பி.சி.சி.ஐ.
|22 Aug 2024 3:50 PM IST
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று அறிவித்துள்ளது.
அதில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.
முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.