< Back
கிரிக்கெட்
பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ திட்டம் ?
கிரிக்கெட்

பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ திட்டம் ?

தினத்தந்தி
|
5 Nov 2024 6:37 AM IST

ஒரு பயிற்சியாளராக கம்பீர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பினஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்தது.

இந்த நிலையில், இந்திய அணி சந்தித்த தோல்விகள் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் பயிற்சி பண்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கம்பீருக்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு விஷயத்தில் அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருந்தது. வேறு எந்த பயிற்சியாளருக்கும் கொடுக்காத முன்னுரிமையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து இருந்தது. அவரும் சில வீரர்களை தேர்வு செய்யும்படி வலியுறுத்தி இருந்தார். இதற்கு முன்பு எந்த பயிற்சியாளரும் அணியை இறுதிசெய்யும் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றதில்லை.

இப்போது நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியால் அணித் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அவரது அதிகாரத்தை குறைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அடுத்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்டுகளில் குறைந்தது 4-ல் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு பயிற்சியாளராக கம்பீர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மேலும் செய்திகள்