< Back
கிரிக்கெட்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ
கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ

தினத்தந்தி
|
29 Nov 2024 8:01 PM IST

இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மனப்ரீத் கவுர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் இணைந்து ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளது. டாப் 8 அணிகள் பங்கேற்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்காக இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் மத்திய அரசு இந்திய அணிக்கு பாகிஸ்தான் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பில் ஐசிசி-யிடம் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த முடியாது என்று நேரடியாகவே தெரிவித்தது.

இதனால் ஐசிசியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. இதற்காக ஐசிசி தரப்பில் பிசிசிஐ நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்