< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்டிலிருந்து இடைவேளை எடுக்கும் வங்காளதேச முன்னணி வீராங்கனை.. காரணம் என்ன..?
|7 Jan 2025 7:41 AM IST
இவர் வங்காளதேச அணிக்காக 52 ஒருநாள் மற்றும் 83 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டாக்கா,
வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஹானாரா ஆலம் (வயது 31) மனநலப் பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து 2 மாத காலம் இடைவேளை எடுப்பதாக கூறியுள்ளார். இவரது முடிவை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இவர் வங்காளதேச அணிக்காக 52 ஒருநாள் மற்றும் 83 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான வங்காளதேச அணியிலும் இடம்பெற்றிருந்தார்.