கிரிக்கெட்
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆட்டம்: மழையால் தற்காலிகமாக நிறுத்தம்
கிரிக்கெட்

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆட்டம்: மழையால் தற்காலிகமாக நிறுத்தம்

தினத்தந்தி
|
25 Jun 2024 3:21 AM GMT

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 115 ரன்கள் அடித்துள்ளது.

கிங்ஸ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 3.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

லிட்டன் தாஸ் 13 ரன்களுடனும், சவுமியா சர்க்கார் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 85 ரன்கள் அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்