< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஜாலியான கலந்துரையாடல்

image courtesy: instagram/albomp

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஜாலியான கலந்துரையாடல்

தினத்தந்தி
|
29 Nov 2024 12:10 PM IST

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று சந்தித்தனர்.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மோதுகிறது. பிங்க் பந்தில் நடைபெற உள்ள இந்த போட்டி நாளை தொடங்க உள்ளது.

இதனையொட்டி இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேற்று நேரில் சந்தித்தனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்திய வீரர்களுடன் ஆண்டனி அல்பானீஸ் ஜாலியாக கலந்துரையாடினார்.

அதில் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த பும்ராவை, "உங்களுடைய ஸ்டைல் மற்றவர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது" என்று பாராட்டினார். அதற்கு பும்ரா 'நன்றி' என்று பதிலளித்தார்.

அடுத்ததாக விராட் கோலியிடம். "பெர்த்தில் உங்களுக்கு நல்ல நேரம். எங்களுக்கு நெருக்கடி இல்லாததுபோல் தெரிந்த வேளையில் நீங்கள் சதமடித்தீர்கள்.

அதற்கு பதிலளித்த விராட், "அந்த சமயங்களில் சில விஷயங்களை அதில் சேர்த்தால் நன்றாக இருக்கும்" என்று ஜாலியாக பதிலளித்தார்.

அதற்கு "இந்தியராக இருந்தால் அப்படித்தான் இருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும்" என்று விராட் கோலிக்கு மீண்டும் பிரதமர் பதிலளித்தார்.

அதைத்தொடர்ந்து மற்ற இந்திய வீரர்களுக்கும் வரிசையாக கை கொடுத்து பிரதமர் பாராட்டினார். இறுதியாக அந்த சந்திப்பு பற்றி ஆண்டனி அல்பென்ஸி தனது இன்ஸ்டாகிராமில்,

"இந்திய அணிக்கு பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பெரிய சவால் காத்திருக்கிறது. இருப்பினும் நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு கொடுப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்