< Back
கிரிக்கெட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்

image courtesy: AFP

கிரிக்கெட்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்

தினத்தந்தி
|
29 Dec 2024 10:48 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸ் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிளேயிங் 11-ல் இடம்பெறாத இவர் 4-வது போட்டியில் மாற்று பீல்டராக களத்திற்கு வந்தபோது காயமடைந்துள்ளார். காயம் 5-வது போட்டிக்குள் முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என்பதால் இவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் செய்திகள்