< Back
கிரிக்கெட்
டெஸ்டில் புதிய சாதனை படைத்த  ஆஸ்திரேலிய வீரர்  ஸ்மித்
கிரிக்கெட்

டெஸ்டில் புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்

தினத்தந்தி
|
30 Jan 2025 8:11 AM IST

ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார் , அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது . முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது . கவாஜா , ஸ்மித் இருவரும் சதமடித்தனர் .

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார் . ஸ்மித் , டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை (115-வது டெஸ்ட்) கடந்துள்ளார் . ஒட்டுமொத்தத்தில் இந்த மைல்கல்லை எட்டிய 15-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே ரிக்கிபாண்டிங் (13,378 ரன்), ஆலன் பார்டர் (11,174 ரன்), ஸ்டீவ் வாக் (10,927 ரன்) ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்