< Back
கிரிக்கெட்
ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆஸ்திரேலிய கேப்டன்
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆஸ்திரேலிய கேப்டன்

தினத்தந்தி
|
18 Dec 2024 5:48 PM IST

அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரிஸ்பேன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது.மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் நினைவுப் பரிசு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் கையொப்பம் அடங்கிய ஜெர்சியை அஸ்வினுக்கு பேட் கம்மின்ஸ் வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்