< Back
கிரிக்கெட்
2வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி
கிரிக்கெட்

2வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி

தினத்தந்தி
|
16 Nov 2024 5:33 PM IST

2வது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், ஒருநாள் கிரிக்கெட்டில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் பிரிஸ்பென்னில் இன்று நடைபெற்றது .

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் தொடக்க வீரர் மேதிவ் ஷார்ட் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் ஹிரிஸ் ரால்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான், பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் 3 ரன்னிலும், ரிஸ்வான் 16 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கான் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஆனால், அடுத்துவந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் பாகிஸ்தான் 19.4 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றிபெற்றது.

கடைசி வரை போராடிய பாகிஸ்தான் அணியின் இர்பான் கான் 28 பந்துகளில் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்