< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸி.டெஸ்ட் தொடர் நிறைவு: இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த போட்டி எப்போது..?
|6 Jan 2025 7:55 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்து தொடரை ஏமாற்றத்துடன் முடித்துள்ளது.
இந்த தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்குரிய அடுத்த தொடர் குறித்த விவரம் பின்வருமாறு:-
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் டி20 மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடரின் முதலாவது டி20 ஆட்டம் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்க உள்ளது.