"புகையிலை எதிர்ப்பு" - சச்சின் டெண்டுல்கரின் பதிவு வைரல்
|சச்சின் டெண்டுல்கரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். எக்ஸ் தளத்தில் இவரை 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் புகையிலை எதிர்ப்பு தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது;
"நான் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கும் போது எனது தந்தை எனக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கினார். புகையிலையை ஒருபோதும் ஊக்குவிக்க வேண்டாம் என்பதுதான் அந்த அறிவுரை. நான் இதுவரை அதன்படியே வாழ்ந்து வருகிறேன். சிறந்த எதிர்காலத்திற்காக புகையிலைக்கு பதிலாக ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்போம்.'
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். புகையிலையை ஊக்குவிக்க வேண்டாம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.